அன்பின் முகவரி..!
முகவரி
அன்பின் முகவரி
ஆசை கொண்ட
இதயத்தில்
பிறக்கும்!
அறிவின் முகவரி
புத்தி கொண்ட
மாந்தர்களிடம்
பிறக்கும்!
ஆரோக்யத்தின் முகவரி சக்தியும் திடமும் கொண்ட
மாந்தனிடம் பிறக்கும்!
ஆன்மீகத்தின் முகவரி சமத்துவ சாதி மத மனிதநேய நல்லிணக்கத்தில்
பிறக்கும்!
வாழ்க்கையின் முகவரி செம்மையான அறநெறியில் பிறக்கும்!
மொத்தத்தில் முகவரி உனது அடையாளம் உன் செயலால் உன்னை இப்புவிக்கு அறிமுகம் செய்யும்!
பா ஆக்கம்
என்றும் அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை