ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்து சிதறியுள்ளது..!
ஸ்டார்ஷிப் விண்கலம் பரிசோதனைக்காக நேற்றிரவு விண்ணில் செலுத்தப்பட்ட வேளை விண்ணில் வெடித்து சிதறியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரொக்கெட் ஆனது 10 போலி செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டிருந்தன.புறப்பட்ட ரொக்கெட்டில் இருந்து விண்கலம் இருந்த தொகுதி தனியாக பிரிந்ததும் பூஸ்டர் திட்டமிட்டப்படி ஏவுதளத்திற்கு திரும்பியது.ஏவுதளத்திலுள்ள உள்ள பிரமாண்ட எந்திர கைகள் பூஸ்டரை பிடித்து நிறுத்தியது.
இதே வேளை விண்வெளி சென்ற ஸ்டார்ஷிப் விண்கலம் திடீரென தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்து வெடித்து சிதறியுள்ளது.