அன்பு..!

இங்கே முட்டையிலிருந்து
கோழி வந்ததா …அல்லது
கோழியில் இருந்து முட்டை
வந்ததா ? இதற்கான பதில் …

கடவுள் மனிதனைப் படைத்தானா ?
இல்லை கடவுள்களை இந்த
மனிதனே படைத்தானா ? இதனையே
உனக்குள்ளாகக் கேட்டுப்பார்…

இங்கே
ஒரு பொடங்களாயும் … இல்லை …
இது இந்தப் பிரபஞ்சத்தின் …
இயல்பான சுழற்சி மட்டுமே … இங்கே
கொஞ்சம் கொஞ்சமாக
பரிணமித்து வளர்ந்தது …

இங்கே
எந்தவொரு கடவுளும் இல்லை இல்லை இல்லை …

இங்கே நீயே கடவுள் … இந்த
உலகையே அழிக்கும்
ஆற்றலும் ….
காக்கும் ஆற்றலும்
எவ்வெவர்க்கும் உண்டு …
அன்பும் அரவணைப்பும்
உன் மனதுக்குள்
இருந்தால் நீ ஒரு கடவுள் … இது
ஏதும் உனக்குள் இல்லை
எனில் நீயே இந்த உலகினுக்கு
எமன் …

நீயே காக்கிறாய் …நீயே அழிக்கிறாய்
பாவம் நீ உன்னை மட்டுமே அறியாமல்
இருக்கிறாய் …😭🙏❤️🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *