தீ பற்றிய ஹோட்டல்..!
துருக்கியின் போலு மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பிடித்ததன் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபபடுகிறது.
12 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் நேற்றைய தினமே தீபற்றியுள்ளது.இதன் போது 238 பேர் தங்கியிருந்த நிலையில் எதிர் பாரதவிதமாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தீயானது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொர்பான விசாரணைகள் தற்போது நடைப்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.