இது ஒரு தேவகானம்..!
என் அம்மா
தவம் கிடந்தாள்
என் மழலை மொழி கேட்பதற்கு!
நான் அ என்று சொல்லும் போதெல்லாம்
அவள் வாய் தித்திக்கும்!
ஒரு நாள் அ ம் மா என்ற என் குரல் கேட்டு முகமெல்லாம்
முத்த மழை பொழிந்தாள் என் தாய் !
நான்
வாய் திறந்து பேசிய சின்னஞ்சிறு
வார்த்தை கூட
என் அம்மாவுக்கு தேவகானம் !
இரசித்தாள்
!நான் ஒ
வ்வொரு வார்த்தையையும்
கூட்டிச் சொல்லும் போதெல்லாம்!
குழந்தை போல்
கைதட்டி சிரிக்கும்
குழந்தையானாள்!
நான் அம்மா .அப்பா. மாமா. தாத்தா. பாட்டி என்று சொல்ல அவ்வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு
தன் இதழ் பூ
சிரித்து மகிழ்ந்தாள்! தப்புத் தப்பாய் மழலையில் பேசிய போது மகிழ்ந்த தாய்
குமரியில் கண்டித்தாள்!
நீ பேசும் மொழி சரியில்லை என்றாள் !
உன் வாயாடல் போற இடத்தில் செல்லாது என்று சொல்லாடல்
பெண்பிள்ளை சத்தமிட்டு பேசாதே என்று ஆசிரியர் போல்கண்டித்தாள் !
பள்ளிக்கூட
பட்டிமன்ற பேச்சில் என்சொல்லாடல்
சிறப்பென்றாள்!
பழமொழி பேசியே என்னை வழி நடத்தினாள் அன்று!
கேட்டு சலித்த
என் தாய் மொழி
தாயின் மொழி
இன்று நான் பக்குவமாய் வாழ வழிகாட்டிய வைரமொழி!
அன்பியாசென்னை