இதனால் ஆனந்தம் கிடைக்குமா?

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *அடிமை ஒழிப்பு தினம்* *சிறப்பு கவிதை*

படைப்பு கவிதை ரசிகன்
குமரேசன்

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

நம்முடைய
மகிழ்ச்சிக்காக
மீன்களை
தொட்டியில்
அடிமைப்படுத்தினோம்
மீன்களின் மகிழ்ச்சி….

நம்முடைய
எதிர்காலத்தை அறிய
கிளியை
கூண்டில்
அடிமைப்படுத்தினோம்
கிளியின் எதிர்காலம்….?

நம் குடும்பம் வாழ
குரங்கை கயிற்றில்
கட்டினோம்
குரங்கின் குடும்பம்…..?

நம்முடைய வாழ்க்கை்காக
யானையை சங்கிலியில்
பிணைத்தோம்
யானையின் வாழ்க்கை……?

அடிமைப்படுத்துவதிலேயே
ஆனந்தமடைகின்றவர்களே!
நீங்கள் ஒரு நாள்
அடிமையாக
வாழ்ந்து பாருங்கள்
அதன் வலி தெரியும்…..

பறவைகள்
விலங்குகள்
அடிமைப்படுத்துவதைத் தடுக்க
நமது அரசாங்கம்
எடுத்து முயற்சியில்
பாதியைக் கூட எடுக்கவில்லை
மனிதர்களை
அடிமைப்படுத்துவதை தடுக்க….. மனிதர்கள் என்ன
விலங்கினும்
கீழானவர்களோ……?

செங்கல் சூலையில்
கல்லாகிப் போனது
செம்மண் மட்டுமல்ல
“அடிமைப்பட்ட மனங்களும்” தான்…..
எரிந்து சாம்பலானது
பனை மரங்கள் மட்டுமல்ல
“பலரின் வாழ்க்கையும்” தான்…..

வாங்கிய பணத்தை
திருப்பிக் கட்ட முடியாமல்
போனதால்….
பணக்கார்கள்
அவர்களையே!
தங்கள் வீட்டு வாசலில்
“கால்நடைகளாகக்”
கட்டியதுதான்
சுதந்திரம் அடைந்த
இந்தியாவின்
மிகப்பெரிய சாதனையோ….?

கொத்து கொத்தாக செத்து
அந்நியரிடமிருந்து
சுதந்திரம் பெற்றுத் தந்தது….
ஐயோ…..!!!
என் நாட்டு மக்கள்
“கொத்தடிமைகளாக
வாழத்தானோ ….?

குடம் குடமாய்
உடல் குருதியைக்
கொட்டியது
இங்கு சிலர்
கும்மாளம் போட்டு
வாழத்தானோ……?

புழுவை வைத்து
மீனைப் பிடிப்பார்கள்….
வலையை வைத்து
மானை பிடிப்பார்கள்….
கண்ணியை வைத்து
பறவைகளைப் பிடிப்பார்கள்
ஐயோ…..!!!
பணத்தை வைத்துப்
பாவிகள்
ஏழைகளைப் பிடிக்கிறார்களே…!
“அடிமைகள” என்று
அவர்கள் மீது
“முத்திரை”
அடிக்கின்றார்களே……!
இந்த நிலை மாறும் நாள்
எந்நாளோ ……?
அந்நாளே
இந்தியா
வல்லரசான நாளாகும்…..

ஆண்டுதோறும்
“அடிமை ஒழிப்பு நாள்”
வருகிறது …..
என்று வருமோ “அடிமைப்படுத்துபவர்களின்
ஒழிப்பு நாள்……?” *கவிதை ரசிகன் குமரேசன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *