75 வது குடியரசு தின விழா

75-வது குடியரசு
தின விழா 🇮🇳

இந்தியாவே என் தாய் நாடு…
இப்படி உரைப்பதினால்
இதயத்தில் தேசபக்தி
இருப்பது போல் அன்று…
இன ஒற்றுமை காத்து
இயற்கை வளம் காத்து
இதயம் நிற்பதே தேச பக்தி..

நாட்டுப் பண் பாடி
நரம்பு புடைத்து
நிற்பதல்ல தேச பக்தி..
நாட்டின் பிரச்னை தீர்ந்திட
நாளும் உழைப்பதே தேச பக்தி.

கொடியேற்றி
கொண்டாடுவது
அல்ல தேச பக்தி..
கொடுமைகளை ஒழிக்க
கொதித்து எழுவதே தேச பக்தி..

தியாகிகள் பெருமை பேசுவோம்..!
தனிதிறமையும் வளர்த்து
தேசத்தின் புகழ் உயர்த்தி
தேச பக்தி காட்டுவோம்..!

ஆன்றோர் தந்திட்ட
அருமை சுதந்திரத்தை
மனதில் நிறுத்தி
மறந்து போன
மனித நேயத்தை

மீண்டும் நிறுவுவோம்..!

இனிய
குடியரசு தின
நல்வாழ்த்துக்கள் 🇮🇳

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *