மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய பஸ் சாரதி கைது

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்தியதாகக் கூறப்படும் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ் ஒன்று கவனக்குறைவாகப் பயணிப்பதாக குளியாப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த பஸ்ஸை சோதனையிட்ட போது சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 37 வயதுடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்களை ஏனைய வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.