பள்ளிவாசலின் சகல ஆவணங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைக்க சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அறிவிப்பு

பள்ளிவாசலின் சகல ஆவணங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைப்பது தொடர்பாக என தலைப்பிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் மேற்படி விடயம் தொடர்பாக, வக்பு சபையின் W8/10215/2025 எனும் தீர்மானத்தின் பிரகாரம் கல்முனை- சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசவின் 42 பேர்களுக்கு விசேட நம்பிக்கையாளர் நியமனம் 18.02.2025 தொடக்கம் 17.02.2026 வரை வழங்கப்பட்டுள்ளது. இவ்விசேட நியமனம் தொடர்பாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களிடமுள்ள பள்ளிவாசல் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை புதிய விசேட நம்பிக்கையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். என தெரிவித்து வக்பு சபையின் WB/10215/2025 எனும் தீர்மானத்தின் பிரதி இணைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்த கடிதத்தின் பிரதி சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசலின் பெயர் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என சட்டவிரோதமாக அழைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.