உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மிக மிக தொலைவில் உள்ளது-ஜெலன்ஸ்கி..!
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் மிக மிக தொலைவில் உள்ளது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை யின் போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,உக்ரைன் ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.இதனை தொடர்ந்து இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்து ஜெலன்ஸ்கி தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.”அமெரிக்காவுடனான எங்களது நட்புறவு தொடரும் என்று நினைக்கின்றேன்.உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மிக மிக தொலைவில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.