உணர்வுகளின் சிகரம்..!
❤️❤️❤️❤️❤️
❤️ இதயம் ❤️
❤️❤️❤️❤️❤️
இன்பத்தில் சிரிக்கும்
இடர் கண்டு துடிக்கும்
துன்பத்தில் துவளும்
தனக்குத்தானே பேசும்
உணர்வுகளின் சிகரம்
வித்தியாசமான
சதை கட்டி…. இது அன்பை
கொடுக்குமே கொட்டி…
காதல் கனிவு பாசம் என
நல்லெண்ணங்களும்
பொறாமை சினம் வெறுப்பு
தீய எண்ணங்களும்
உருவாகும் ஊற்று….
விரும்பியது கிடைத்தால்
மகிழும் … இல்லையேல் வருந்தும்… மனம் திறந்து
பேசமுடியால் மௌனிக்கும்..

மொத்தத்தில்…
இதயம் என்பது
இன்பங்களை பூட்டிவைத்த
புதையல் பெட்டகம்
சொல்ல முடியாத
சோகங்களை
தனக்குள்ளேயே
அடக்கம் செய்யும்
புதைகுழி….
சரீனா உவைஸ் ✍️