வர்த்தக போரிலிருந்து பின்வாங்கப் போவதில்லை-கனடா..!
வர்த்தக போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கனடா பிரதமர் ஜெஸ்டின் டரூடோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ” இதன் மூலம் அமெரிக்க குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் .அமெரிக்காவுடனான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.கனேடியர்கள் நியாயம் மற்றும் கண்ணியமிக்கவர்கள் . சொந்த நாட்டின் நல்லிணக்கம் ஆபத்தில் இருக்கும் போது சண்டையிலிருந்து பின்வாங்கமாட்டோம். “என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றபின் கனடா மற்றும் மெக்ஷிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபபடும் பொருடகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலடி வழங்கும் முகமாக அமெரிக்க பொருட்களுக்கும் வரி விதிக்கபபடும் என்று கனடா பிரதமர் ஜெஸ்டின் அறிவித்தார் .இதனையடுத்து ட்ரம்ப் கனடா பொருட்களுக்கு மேலும் வரிவிதிக்கப்படும் என்று எச்சரித்த நிலையிலேயே கனடா பிரதமர் ஜெஸ்டின் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது