முன்சக்கரமின்றி பயணித்த விமானம்,கடந்து போன திகிலான நிமிடங்கள்..!
விமானத்தின் முன் சக்கரம் இன்றி பயணித்த சம்பவம் ஆச்சரியத்திதை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது நேபாளத்தில் இடம்பெற்றுள்ளது.நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் புத்தா ஏயர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.அச்சமயத்தில விமானம் மேலே எழுந்த போது முன் சக்கரம் கீழே விழுந்துள்ளது.
எனினும் இது யாருக்கும் தெரியவில்லை.இதனையடுத்து திரிபு வனம் சர்வதேச விமான நிலையத்தில் 5.10 மணியளவில் தரையிறங்கியது.இதனையடுத்து வழமைப்போல் நடக்கும் ஆய்வு நடந்தது. அதன் போதே குறித்த விமானத்தின் ஒரு சக்கரம் இல்லாதது தெரிய வந்தது.இதனையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.இதனையடுத்து ஜனக்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே விமானம் திரும்பும் பகுதியில் முன்சக்கரம் கிடந்துள்ளது.அதனை ஊழியர்கள் எடுத்து சென்றனர்.25 நிமிடங்கள் விமானம் பறந்த போதும் இது பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.இந்த பயணத்தின் போது திகிலான நிமிடங்களை அவர்களுக்கு தெரியாமல் கடந்து சென்றுள்ளனர்.இதில் பயணித்த 62 பயணிகளும் பாதுகாப்பாய் உள்ளனர்.
