இந்தியாவிற்கு ஆயுதங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்-அமெரிக்கா..!
இந்தியாவானது ரஷ்யாவை விடுத்து அமெரிக்காவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் ஹோவாட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது.ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா அதிகமான இராணுவ தளபாடங்களை வாங்கிவருகிறது.
இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று நினைக்கின்றோம்.ரஷ்யாவிற்கு மாற்றாக இந்தியாவிற்கு நவீன அமெரிக்க பாதுகாப்பு துறை சார்ந்த தளபாடங்கள் ,ஆய்தங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்.இதன் மூலம் இந்திய அமெரிக்க உறவு பலமடையும் என்று தெரிவித்துள்ளார்.
