காஸா விற்பனைக்கு அல்ல- பாலஸ்தீன குழுவினர்..!
காஸா விற்பனைக்கு அல்ல என்று பாலஸ்தீன குழுவினர் தெரிவித்துள்ளனர்.காஸாவை கைப்பற்றி அதனை சுற்றுலா தளமாக மாற்றுவோம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஸ்கொட்லாந்து நாட்டில் அவருக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் புகுந்த பாலஸ்தீன குழுவினர் அங்குள்ள புல்வெளி பகுதியில் “காஸா விற்பனைக்கு அல்ல” என்று பிரமாண்டமாக எழுதி வைத்திருந்தனர்.

மேலும் கோல்ப் மைதானம் முழுவதும் குழிகள் தோண்டப்பட்டு ,ட்ரம்ப் காஸா வை தனது சொத்தாக கருத முயற்சித்தால் ,அவரது சொந்த சொத்து தங்களால் சூறையாடப்படும் என பாலஸ்தீன குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பாலஸ்தீன குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.