இந்த தொடரை எதிர் கொள்ள ஆர்வமாகவுள்ளோம்-வருண்..!
நாங்கள் அனைவரும் இந்த தொடரை எதிர் கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம் என்று கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது.”நாங்கள் அனைவரும் இத்தொடரை எதிர்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம்.விராட் கோஹோலியை எதிர்த்து விளையாட வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சியமாக ,அவர் எனக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்துள்ளார்.அதனால் நான் அவருக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன் .”என்று தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 18 வது சீசன் போட்டிகள் இன்று கல்கத்தாவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டியில் கல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் ரோயல் செலேஞ்சஸ் ஆகிய அணிகள் மோத வுள்ளமை குறிப்பிடத்தக்கது.