ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை நகரம்!|வீடியோ வெளியிட்ட ஈரான்
உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஈரான் தனது மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை தளத்தை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் கூடிய இந்த நிலத்தடி நகர், பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் இலக்காக கொண்டு தாக்க முடியும் என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எச்சரித்து வரும் சூழ்நிலையில், இந்த வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய நிலத்தடி ஏவுகணை தளத்தில் பல்வேறு வகையான துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் நிறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.