அமெரிக்க பிரஜைகள் காஷ்மீர் பகுதிக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது..!
இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜம்பு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.இதன் போது 26 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது.

இதனிடையே ஶ்ரீ நகர்.குல்மார்க்,பஹல்காம் பகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன.ஆகவே அமெரிக்கர்கள் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.