உக்ரேன் மீது ட்ரோன் தாக்குதல்..!
உக்ரேன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல மேற்கொண்டுள்ளது. நேற்றைய தினம் இந்த தாக்குதல் நிகழத்தப்பட்டுள்ளது. உக்ரேனின் தலைநகரின் கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் போது 3 பேர் உயிரிழந்ததுட் மேலும் 10 பேர் காயங்களுக்குள்ளானார்கள்.
அமெரிக்கவானது உக்ரேன் ரஷ்யா போரை நிறுத்த பல முயற்ச்சிகள் செய்துக்கொண்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை நேற்று முன்தினமும் ரஷ்யாவானது உக்ரேன் மீது தாக்குதல் நடத்தியது இதன் போது 09 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்தார்.மேலும் ” தாக்குதலை நிறுத்துங்கள் புடின்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.