அமெரிக்கா ,ஏமன் மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது..!
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இன்று அதிகாலை அல் ஷபன் மற்றும் பனி அல் ஹரித் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலின் போது 2 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டொனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றப்பின்னர் இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏமனில் இருந்து செயற்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பிரதேசத்தில் இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு படு தொல்லையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது