பிலிப்பைன்ஸ் கடற் பரப்பில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா..!
அமெரிக்க இராணுவம் முதன் முறையாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கோரி நிற்கின்றது.இந்த பகுதிக்கு பிலிப்பைன்ஸ்,மலேசியா,புரூனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோருகின்றன.இந்நிலையில் அப்பகுதியில் செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ற்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கின்றது.