பதிவுகள்

தாய் போல தந்தையும் உண்டு..!

தலைப்பு: தாய் போல தந்தையும் உண்டு
“””””””””””””””””””””””””””””””
என் கைபிடித்து நடை பழகியவன் அல்ல என் மகன்….

என் பாதத்தின் மீது பாதம் பதித்து நடை பழகியவன்….

எங்களின் இருவரின் நடையும்
ஒரே தொணியில் ஒரே நிலையில்

கைகளை வீசி நடப்பதாகட்டும்
கால்கள் கடந்து போவதாகட்டும்
யாவும் யானாக..

எனக்கு இணையாக நடந்தாலும் அவன் பாதங்கள் வகுத்த பாதைகள் வேறு…

தடுத்து நிறுத்தியதில்லை.. தவறி விழ கண்டதில்லை.. தடுமாறுகையில்
தவறவிட்டதில்லை….

பாதத்தின் நரம்புகளில் அழுத்தம் கூட உதிரம் பாய்ந்தது.. புத்துணர்வு மிகுந்தது…

எனது பழைய புகைப்படங்களை தேடுவதில்லை நான்.. பக்கத்தில் என் மகன்….

எனது தொலைந்து போன இளமைப் பருவம் அவன் உருவில் அவனைத் தொடரும் முதுமை பருவம் என் உருவில்…

தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் தோற்றுப் போகிறேன்.. அவன் வாகை சூட வேண்டி..

நாளுக்கு நாள் நான் நெகிழ்ந்து தீர்க்கிறேன்.. நானாக அவன் மாறி எனையாளவே…
தந்தையே அன்னையாக மாறிய தருணம்!!!

முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
10-5-2025-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *