செய்திகள்

அமெரிக்க சீனா விற்கிடையிலான வர்த்தக போர் நிறைவடையும் சாத்தியம்..!

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரிகளை 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளன.சீன அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளும் வரிகளை குறைக்கவும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றப்பின்னர் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வந்தார்.குறிப்பாக அமெரிக்காவிற்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி யினை விதித்தார்.இந்த வரி விதிப்பிற்கு சீனா பதிலடி கொடுத்தது.இதன் காரணமாக டொனால்ட் ட்ரம்ப் 145 சதவீத வரியினை விதித்தார்.இந்நிலை தற்போது இந்த வர்த்தக போரானது முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *