18 வயதில் ஜப்பானியர்கள் இனி சட்டத்தில் வயதுக்கு வந்தவர்கள்
ஜப்பானியர்கள் 18 வயதில் வயதுக்கு வர அனுமதி கிடைக்கப்போகிறது.
ஜப்பான் உலகின் பிரபலமான தொழில்நுட்பப் பொருட்களை அறிமுகப்படுத்திய முன்னேறிய நாடு. ஆனாலும், இதுவரை ஜப்பானியர்கள் 20 வயதில்தான் வயதுக்கு வந்தவர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.
எந்த ஒரு ஒப்பந்தங்களிலும் 20 வயதுக்குப் பிறகு ஒரு ஜப்பானியர் கையெழுத்திட்டால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். திருமண பந்தத்தில் பையனாக இருப்பின் 18 வயதிலும் பெண்ணாக இருப்பின் 16 வயதிலும் கல்யாணம் செய்துகொள்ளலாம், பெற்றோர்களின் சம்மதத்துடன் மட்டும். அல்லது அவர்கள் தனிப்பட்ட முடிவுக்கு 20 வயதுவரை காத்திருக்க வேண்டும்.
2022 ம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்து அந்த நிலையை மாற்ற ஜப்பானிய அரசு முடிவெடுத்திருக்கிறது. புதிய சட்டங்களின்படி 18 வயதிலிருந்து சட்டப்படி ஆணோ, பெண்ணே வயதுவந்தவர்களாகத் தங்கள் முடிவுகளை தாங்களாகவே எடுக்கலாம்.
ஆனால், சூதாட்டம், மதுப் பாவனை போன்றவைகளைப் பொறுத்தவரை தொடர்ந்தும் 20 வயது எல்லை பேணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுதுவது சாள்ஸ் ஜே
http://www.vetrinadai.com/news/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86/