தாயகத்திலும் புலத்திலும் நடந்த சிதம்பரா கணிதப் போட்டி
தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒரே நாளில் ஏற்பாடாகி இந்த வருடமும் கடந்த 16ம் திகதியன்று CWN 11 plus சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சைகள் மிகச்சிறப்பாகநடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.
இங்கிலாந்தில் தலைமையகமாக கொண்டியங்கும் பரீட்சை ஆணையக்குழு தாயகம் முதல் கனடா, அமெரிக்கா,அவுஸ்ரேலியா நியூசிலாந்து என பல நாடுகளிலும் ஒரே நாளில் தரம் 1 முதல் தரம் 10 வரை பரீட்சைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் தமிழ் மாணவர்களுக்கான பரீட்சையாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல வினாத்தாள்களாக நடைபெற்றிருந்தது.பொதுவாக தங்கள் பாடசாலைகளில் பல போட்டிப்பரீட்சைகளை சந்திக்கும் மாணவர்களுக்கு தங்கள் சக தமிழ் மாணவர்களுக்குள் நடைபெறும் போட்டிப்பரீட்சை இது ஆகையால் பெரும் ஊக்கத்துடன் பங்குபற்றியிருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.பெற்றோர்கள் தம்பிள்ளைகள் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பிள்ளைகளை தயார்படுத்தலுகளுடன் ஈடுபட்டுகொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இந்த போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்ற விவரங்களும் அவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் வரும் ஜூன் மாதத்தில் லண்டன் நகரமையத்தில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் வைத்து அறிவிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் தாயகத்தில் கடந்த வருடப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த வருடம் அதே பிரமாண்டமான மேடைக்கு தாயகத்திலிருந்து அழைக்கப்படவிருக்கிறார்கள் என்பதும் அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.