18 வயதான ஐரோப்பியர்களுக்கு சுற்றுலா பயணம் போக அதிர்ஷ்டம்
18 வயதான 20, 000 ஐரோப்பியர்களுக்கு இவ்வருடம் ஐரோப்பாவை இலவசமாகச் சுற்றும் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.
சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மனப்பான்மையை பரவி வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, சமூகப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வரவும் அவர்களைக் கையாள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் ஒற்றுமையின்மை போன்றவைகள் பிரிட்டனை அடுத்து சமீபத்தில் இத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அலையை அரசியலில் பலப்படுத்தியிருக்கிறது.
அந்த நிலைமையை மாற்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்ல விளம்பரம் தேடப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவைகளில் ஒன்றுதான் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கும் இந்த 20 000 இலவச ரயில் சீட்டுக்கள்.
18 வயதான ஐரோப்பியர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் நாடுகள் அவைகளின் ஐரோப்பிய சமூகப் பாரம்பரியம் ஏன் முக்கியம் என்பதைப் பற்றிய தங்கள் எண்ணத்தை எழுதியனுப்பவேண்டும். அந்தக் காரணங்கள் போட்டியின் நடுவர்கள் கருதுவது போல இருக்குமானால் குறிப்பிட்டவருக்கு அந்த இலவச ரயில் சீட்டு கிடைக்கும். பிரயாணத்தின் பின்பு அப்பிரயாணத்தின் விபரங்கள் பற்றியும் அவர்கள் எழுதியனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தடவையாக 12 மில்லியன் யூரோக்கள் செலவில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த வருடங்களில் மேலும் பலர் இலவசப் பயணம் செய்யக்கூடியதாக பலப்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.
http://www.vetrinadai.com/news/age-18-japanese-legal-change/