பத்மவிபூஷண் விருதை பெற்றார் இசைஞானி
இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்றகனவே பத்மவிபூஷண் விருதுப்பட்டியலில் மூவரில் ஒருவராக தெரிவாகி இன்று அந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பெற்றிருந்தார்.
கலை இலக்கியம் விளையாட்டு, சமூகம் சேவை , மருத்துவம் போன்ற முக்கியமான பல துறைகளிலும் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் அவர்களை கெளரவப்படுத்தி பத்ம விருதுகள் வழங்குவது வழமை.
அந்த அடிப்படையில் இசைத்துறையும் நெடுங்காலமாக முழுமூச்சுடன் ஈடுபட்டு பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இசைஞானிக்கு இந்த வருடம் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கட் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அவரோடு இன்னும் 9 பேருக்கு அதேவிருதுகள் வழங்கப்பட்டது.
அதைவிட தமிழகத்தின் நாட்டார் பாடல் புகழ் விஜயலட்சுமி நவநீதன கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல விருதுகள் வரும் எப்பிரல் மாதம் 7 ம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.