தமிழக விஞ்ஞானி தலைமையில் ஏவப்பட்ட செய்மதி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தமிழகத்தின் தமிழ் விஞ்ஞானி தலைமையில் விண்ணில் வெற்றிகரமாக செய்மதியை அனுப்பியுள்ளது.தமிழகத்தின் விஞ்ஞானியான சிவன் அவர்கள் இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றபின் ஏவப்பட்ட முதலாவது செயற்கைகோள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து சரியாக மாலை 4 மணி 56 நிமிடத்திற்கு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றது.ஜிஸாட் 6 A(GSAT-6A) என பெயர் குறிப்பிடப்படும் இந்த செயற்கைகோள் நவீனமயப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் ஆகும். இது GLSV MK -F08 எனும் ரொக்கட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றது.சரியாக 17 நிமிடங்களில் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்கு இந்த ரொக்கட் உதவியாக இருந்திருக்கிறது. இத்தனை விடயங்களையும் தமிழரான தமிழகத்து விஞ்ஞானி சிவன் தலைமையில் சிறப்புடன் நெறிப்படுத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.