ஐரோப்பாவில் ஒரு வீதிகளற்ற கிராமம் !!!!
ஐரோப்பாவில் வீதிகளில்லாமல் கிராமங்கள் இருக்கிறதா என்று எவரும் சிந்திக்கலாம்.ஆனால் இருக்கிறது.நெதர்லாந்து நாட்டில் உள்ள கெய்த்தூர்ன் (Giethoorn) என்ற குட்டி கிராமம் தான் அது.
ஐரோப்பாவில் வாகனங்களால் சூழல் மாசு படாத கிராமம் என்றுகூட சொல்லி விடலாம்.ஏனெனில் வீதிகள் இருந்தால் தானே வாகனங்களில் பயணிக்க முடியும்.!!!!
நீங்கள் உங்கள் வாகனத்தில் இந்த கிராமத்துக்கு போனால் வாகனத்தை கிராமத்திற்கு வெளியிலேயே நிறுத்தி விட வேண்டும். ஏனென்றால் இந்த கிராமத்தில் போக்குவரத்து விதிகளை இல்லை என்பதாலும் நீர் வழித் தடங்களும் ஓடைகளும்,சத்தமில்லாத படகு சாவாரியும் மட்டும் தான் இருக்கிறது என்பதாலும் தான்.
நான்கு மைல் நீளம் கொண்ட ஆழமான நீரோடையும் அதனைக் கடக்க 176 மரத்தாலான பாலங்கள் அவை தான் போக்குவத்துக்கு கைகொடுக்கும்.இவற்றைச் சுற்றிலும் கூரையால் வேயப்பட்ட 18 ஆம் நூற்றாண்டு வரலாற்று அழகு தரும் பண்ணை வீடுகளும் மிக அழகாக காட்சி தருகின்றன.
இந்த அழகிய கிராமம் கி பி 1230 ஆண்டு வாக்கில் மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து தப்பி வந்த ஒரு குழுவால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் குறிப்பிடுகின்றன.இந்த அழகிய வியத்தகு கிராமம் பற்றிய தகவல்கள் இந்த கிராமத்தில் படமாக்கப்பட்ட ஃபேன்ஃபேர் (FANFAR) என்ற ஆங்கிலத் திரைப்படம் மூலமே கூடியளவு வெளியுலகுக்குக் அறிமுகமானது என்பதை சுட்டிக் காட்டலாம்.
எழுதுவது கமல்ராஜ் ருவியே
http://www.vetrinadai.com/featured-articles/water-day-2018-nature-for-water/