கான் சினிமாவுக்கு வரும் சினிமாவைத் தடைசெய்கிறது கென்யா
“ரபீக்கி” என்ற பெயரில் கென்யாவிலிருந்து கான் சினிமா விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சினிமாவை கென்யா தனது நாட்டுக்குள் தடை செய்திருக்கிறது. “நண்பி” என்ற அர்த்தமுடைய அந்தச் சினிமா பெண்களிடையேயான ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்பதாலேயே தடை செய்யப்பட்டிருப்பதாகக் கென்யா அறிவிக்கிறது.
கென்யாவின் பிரபல எழுத்தாளரான மொனிகா அரக் டி நியேகோவின் பரிசுகள் பெற்ற நாவலான “ஜம்புலா மரம்” தான் சினிமாப்படமாக்கப்பட்டிருக்கிறது.
ஓரினச்சேர்க்கை உறவுகள் ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் தடை செய்யப்பட்டிருப்பதுமன்றி கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகவும் இருக்கிறது.
“எங்கள் சமூகத்தின் குடும்பம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்கும் இந்தச் சினிமாவை வைத்திருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்கிறது கென்யாவின் அரசு.
கென்யாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் 14 வருடம் சிறைத்தண்டனைக்கு உள்படுத்தப்படுகிறார்கள்.