கருச்சிதைப்பு அனுமதிக்கப்படலமா? அயர்லாந்து
கருச்சிதைவு செய்துகொள்வது 14 வருடங்கள் சிறைத்தண்டனையைத் தரும் நாடு அயர்லாந்து. இன்று 25.05 அங்கே நடக்கும் வாக்களிப்பில் அவ்விடயம் தீர்மானிக்கப்படும்.
வருடாவருடம் கர்ப்பமான சுமார் 3 000 அயர்லாந்துப் பெண்கள் பிரிட்டன் சென்று கருக்கலைப்புச் செய்து கொள்கின்றனர். ரோமன் கத்தோலிக்க சமயக் கருத்துக்கள் சமூகத்தில் பலமாக இருக்கும் அயர்லாந்தில் கருக்கலைப்பு ஒரு மிலேச்சத்தனமான செய்கை என்ற கருத்துள்ளவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.
அரசியல்சாசனத்தில் இருக்கும் கருச்சிதைப்பு தடுப்பை எதிர்த்துப் பெரும்பாலானோர் வாக்களிக்கும் பட்சத்தில் ஏற்கனவே தயாராக இருக்கும் சட்ட மசோதா மூலம் 12 ம் வாரம் வரை ஒருவர் கருச்சிதைவு செய்துகொள்வது அனுமதிக்கப்படும்.