“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது
எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது.
கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது. நிகழ்விற்கு வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு குருகுலராசா அவர்கள் தலைமை தாங்கவிருக்கிறார்.
சிறப்பு வருகையாளராக பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் கலந்துகொள்ளவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுகல் நாவலுக்கான விமர்சன உரையை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எழுத்தாளர் திரு செல்வமனோகரன் அவர்களும் எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களும் வழங்கவுள்ளனர்.
என்னிடம் துப்பாக்கிகள் இல்லை,பீரங்கிகள் இல்லை,குண்டுகளும் டாங்கிகளும் இல்லை, வார்த்தைகள் மட்டுமே உள்ளது என்று தன் வார்த்தைகளை பகிரும் தீபச்செல்வன் நிகழ்வில் தன் ஏற்புரையை வழங்க உள்ளார்.
இதே நாவலுக்கான அறிமுக நிகழ்வு பாரிஸ் மாநகரத்திலும் வரும் 10 ம் திகதி மார்ச் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.