வைத்தியர்கள் சமூகத்தால் கௌரவிக்கப்படும் ஆசிரியர் திரு தம்பிராஜா
உயர்தர மாணவர்களின் பிரபல்யமான விலங்கியல் பாட ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்கள் வடமராட்சி வைத்தியர்கள் சமூகத்தினரால் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமையன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கௌரவிக்கப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தரணியெங்கும் இருக்கும் பல உயிரியல் துறை மாணவர்கள் கல்வி கற்ற பேராசான் திரு தம்பிஐயா தம்பிராஜா ஆசிரியர் என்றால் மிகையாகாது.
ஒரு காலத்தில் Zoology தம்பிராஜா Botany குணா என்று பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் கொடிகட்டி பறந்த ஆசிரியர்கள் இவர்கள்
இவர்களின் கற்பிக்கும் முறையால் ஈர்க்கப்பட்டு கல்வி கற்ற பல மாணவர்களும் இன்று பலதுறைகளுக்கும் தங்களை ஈடுபடுத்தி மிளிர்வது உண்மையே.
அதனடிப்படையில் மருத்துவ கலாநிதிகளாக வைத்திய துறையில் பணிபுரியும் வைத்திய சமூகம் தங்கள் ஆசிரியரை கௌரவப்படுத்தி மாண்பேற்ற தயாராகியுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைத்தியசாலை ஊழியர்களுக்கான சிற்றுண்டி சாலை மற்றும் வைத்தியர்களுக்காக ஒரு ஒய்வு அறை அமைப்பதற்கான கட்டிட அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறும் நாளில் அதன் நிதிச்செலவை முற்றிலும் பொறுப்பேற்ற வடமராட்சி வைத்திய சமூகம் தங்கள் ஆசிரியர் திரு தம்பிராஜா அவர்களையும் அதே மேடையில் கௌரவிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மானிடம் தழைக்க மாபணி செய்த ஆசிரியர் என்று மாண்பேற்றப்படும் விலங்கியல் பேராசான் திரு தம்பிராஜா அவர்களை வெற்றிநடை இணையமும் வைத்திய சமூகத்துடன் இணைந்து வாழ்த்துகிறது.