யாழ் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மருத்துவபீடத்தின் மருத்துவக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.

பல்வேறு மருத்துவக் கண்டுபிடிப்புக்களையும் நவீன காலத்தின் மிக முக்கியமான மருத்துவ முறைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடனும் மருத்துவம் தொடர்பான அறிவியலை மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்குடனும் வெகுசிறப்பாக ஒழுங்குசெய்யப்படும் இந்த மருத்துவக் கண்காட்சி, இந்தவருடம் யாழ் மருத்துவ பீடத்தின்   40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மருத்துவக் கண்காட்சி தொடர்ந்து வரும் வாரவிடுமுறை நாள்கள் வரையிலும்  காலை 9 மணி முதல் பி.ப. 7 மணிவரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

இம்முறையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை விஞ்ஞானம், மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், யௌவன பருவ ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய எட்டுத் தொனிப்பொருள்களில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்  மருத்துவபீடமும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி முற்றிலும் மக்கள் நலன் கருதிய செயற்பாடாக ஒழுங்குபடுத்தியிருப்பதால் அனைவருக்கும் தெரியப்படுத்தி கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எழுதுவது வினோஜ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *