ஜெனீவாவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டம்
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் மக்கள் அலையாக ஜெனீவா நோக்கிய பேரணியாக மிகப்பெரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் இன்று மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி ஐ நா முன்றலை நோக்கியதாக இடம்பெற்றது.ஜெனீவா முருகதாசன் திடலில் நிறைவு பெறும் இந்த மக்கள் போராட்டம் போராட்டத்தின் நிறைவில் முக்கியமாக கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இடம்பெறும் தமிழின படுகொலையை ஆராய்ந்து நீதி வழங்கப்படவேண்டும் , அதே அடிப்படையில் 2011ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அனைத்துலக நீதிமன்று இலங்கையின் குற்றத்தை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்னிலை பெறும் முக்கிய அம்சங்களாகும்.