தேர்தல் காலம் பேஸ்புக்கில் டிரம்ப் – அணி செய்த தகிடுதத்தம்
மசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, என்றாலும் அப்பெயரை வைத்துக்கொண்டு பேஸ்புக்கில் ஒரு உதவியூட்டியை [thisisyourdigitallife] இணைத்துக்கொண்டு அந்த நிறுவனம் 2014 முதல் 50 மில்லியன்- சுமார் 25 விகிதமான அமெரிக்க வாக்காளர்களின் – அமெரிக்கர்களின் விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்துக்கள் போன்றவற்றைச் சேர்த்தது அந்த நிறுவனம்.
270 000 [பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு]அமெரிக்கர்களுக்குத் தமது “சுயபலம்” பற்றிய பரீட்சைகளில் ஈடுபட ஊதியம் கொடுத்த “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” அதே சமயத்தில் அவர்களது பேஸ்புக் நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் விபரங்களையும் வாரியெடுத்துக்கொண்டது.
டொனால்ட் டிரம்பின் தேர்தல் திட்ட அமைப்புத் தலைவராக இருந்த ஸ்டீவ் பன்னொன் அச்சமயத்தில் “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அந்த விபரங்களை டிரம்ப்பின் தேர்தல் அமைப்புக்கு சுமார் 7 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது.
அவ்விபரங்களைப் பாவித்துக் குறிப்பிட்ட வாக்காளர்களின் ருசிகளுக்கேற்றபடி வடிவமைக்கப்பட்ட எண்ணங்கள், கோஷங்கள், கருத்துக்கள் அவர்களுக்காக “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” நிறுவனத்தால் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட உதவியூட்டியை வடிவமைத்த அலெக்ஸாண்டர் கூகன் அதே சமயத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.
“கேம்பிரிட்ஜ் அனலைடிகா” நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கிரிஸ்தோபர் வைலி என்பவர் இவ்விபரங்களை வெளியிடவே மஸாசூசட்ஸ் மாநில நீதிமன்றம் குறிப்பிட்ட விபரங்கள் பற்றிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.
அதே “கேம்பிரிட்ஜ் அனலைடிகா” நிறுவனம்தான் பிரிட்டனில் “பிரெக்ஸிட்” தேர்தலிலும் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிய பக்கத்தினருக்காகவும் உதவிசெய்தது. எனவே, பிரிட்டனிலும் அதே நிறுவனத்தின் “பிரெக்ஸிட்” தேர்தல் பங்கீடு பற்றி விசாரணை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
எழுதுவது சாள்ஸ் ஜே
http://www.vetrinadai.com/featured-articles/russia-election/