பிரான்ஸில் ஆங்கிலத் பரீட்சைகளுக்கு கட்டணம் இல்லை
பிரான்ஸில் இனி பல்கலைக் கழக மாணவர்கள் IELTS , TOFEL மற்றும் TOEIC போன்ற ஆங்கிலத் தேர்வுகளைக் கட்டணமின்றி எழுதலாம் என்று தெரிவிக்கபடுகிறது.
இங்கிலாந்து பிரான்ஸ்க்கு அண்டை நாடாக இருந்தாலும் , இது நாள் வரை ஆங்கிலத்தை முழுதாக அங்கீகரிக்காத பிரான்ஸ் , இப்போது பிரென்ஞ்ச் மாணவர்கள் ஆங்கிலம் கற்பது அவசியம் எனக் கூறத் தொடங்கியுள்ளது .
இதற்கு கடந்த 2016 ஆம் வருடத்தை விட 2017 ஆம் வருடத்தில் ஃப்ரான்ஸின் வெளிநாட்டு வர்த்தகம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது முக்கிய காரணம். வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த பிரென்ஞ்ச் மாணவர்கள் ஆங்கிலம் கற்பது அவசியம் என்பதை பிரென்ஞ்ச் பிரதமர் எதுவார் பிலிப் உணர்ந்து வலியுறுத்தியுள்ளார். இந்த நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பாடத் திட்டத்தோடு இணைந்துள்ள சர்வதேச ஆங்கிலத் தேர்வுகளான IELTS , TOFEL மற்றும் TOEIC தேர்வுகளை அரசாங்க உதவியுடன் எழுதி வெற்றி பெற வழிவகை செய்துள்ளார்.
இனிமேல் பிரென்ஞ்ச் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலத் தேர்வுகளை எழுத எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அரசாங்கமே அக் கட்டணத்தைச் செலுத்தும் .
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு சர்வதேச ஆங்கிலத் தேர்வையும் எழுத 200 யூரோக்கள் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதுவது கமல்ராஜ் ருவியே