எகிப்து தேர்தலில் மீண்டும் ஸிலி வெற்றி!
மத்திய கிழக்கின் ஸ்திர நிலைமைக்கு முக்கியமான நாடு எகிப்து. அங்கே கால் நூற்றாண்டுக்கு மேலாக அசையாத ஆட்சியமைத்திருந்த ஹூஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியின் பின்பு ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்குப் பின்பு ஓரிரு வருடங்கள் உண்டாகியிருந்த அரசியல் நிலையின்மையை 2014 ம் வருடம் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் தீர்த்துவைத்தவர் அல் பத்தா அல்-ஸிஸி.
இராணுவத்தின் மூலம் ஆட்சிகைக் கைப்பற்றித் தேர்தல்களை நடாத்தி 2014 இல் 47.5 விகித வாக்காளர்களைச் சாவடிகளுக்கு “வரவைத்த” அவர் அன்று 92 விகித வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார்.கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தலில் போட்டியிட 2017 முதல் வெவ்வேறு அரசியல் பாசறைகளிலிருந்து சிலர் பெயர்களை அறிவித்தனர். ஆனால், தேர்தல் வாரம் நெருங்கமுதல் அவர்கள் அனைவரும் “ஒதுங்கிவிட்டனர்”. மிச்சமாக இருந்தவர் மூஸா முஸ்தபா மூஸா என்பவர் மட்டுமே.
தேர்தல் முடிவுகள் வந்தபோது ஏற்பட்ட ஆச்சரியங்களில் இரண்டு மூஸா முஸ்தபா பெற்றது மூன்றாவது இடம் [656,534 வாக்குகள்] என்பதும் தேர்தலில் வாக்களித்தவர்கள் சுமார் 41 விகித வாக்காளர்களே என்பதுமாகும்.1,762,231 இரண்டாவதாக வந்தவர் ஸிஸியின் ஆட்சியிலும் தேர்தலும் வாய் திறக்க முடியாததால் அதைத் தங்களது “தவறான வாக்களிப்பால்” செல்லாத வாக்குகள் போட்டவர்கள்.
2014 ம் ஆண்டுத் தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் வாக்காளர்கள் அரச அதிகாரிகளால் கட்டாயமாக வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு போகப்பட்டார்கள் என்ற விடயத்தைத் துணிந்து எழுதிய எகிப்திய பத்திரிகை நிர்வாகத்தினரை அரசு பெரிய தண்டம் ஒன்றால் தண்டித்ததுடன் சில பத்திரிகையாளர்களும் தண்டிக்கப்பட்டனர்.