வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா?
தனது நாட்டின் அணு ஆயுதப் பரீட்சை நிலையத்தை இம்மாதம் 23 – 25 திகதிகளில் மூடிவிடப்போவதாக வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் தெரிவிக்கிறது.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரிய நாடுகளின் பத்திரிகையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கொண்டாட்டம் நடாத்தி அந்த மூடு விழா நடாத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட அணு ஆயுதப் பரீட்சை நிலையத்திலிருப்பவைகளைப் பீப்பாய்களில் போட்டு அகற்றிவிட்டு அந்த நிலையத்தைக் குண்டுவைத்துத் தகர்த்துவிடப்போவதாகவும் அதன் மூலம் வட கொரியா மற்ற நாடுகளுக்குத் தனது திறந்த மனப்பான்மையைக் காட்டப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்னொரு அணு ஆயுதப் பரீட்சை நிலையம் கடந்த ஆண்டு முழுவதுமாக இடிந்து விழுந்து விட்டிருப்பதாக சீனா தனது கவனிப்புக்கள் மூலம் தெரிந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.