அமெரிக்க மிரட்டலுக்கு ஈரான் பதில்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் – ஈரான் தொடர்ந்தும் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதே தருணம், நேற்று அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் “எந்த நாட்டின் மீதும் போடப்பட்டிராத வர்த்தகத் தடைகளை நாம் ஈரான் மீது போடுவோம்,” என்று மிரட்டியிருக்கிறார்.
“ஈரான் மீதோ, ஐரோப்பா மீதோ கட்டுப்பாடுகளைத் திணிக்க நீங்கள் யார்? அமெரிக்கர்கள் இஷ்டப்படி எல்லார் மீதும் சட்டங்கள் போடுவதை இனிமேலும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை,” என்று பதிலுக்குச் சாடுகிறார் ஈரானிய ஜனாதிபதி ரூஹானி.