ரஷ்யாவின் லவ்ரோவ் வட கொரியாவில்.
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சர்கெய் லவ்ரோவ் பேச்சுவார்த்தைகளுக்காக இன்று வட கொரியாவில் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்.
நடக்கவிருக்கும் அமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தையில் தங்களது நோக்குகளையும் ரஷ்யா பிரதிபலிக்க விரும்புகிறது. வட கொரியாவுடன் எல்லையைக் கொண்டிருக்கும் ரஷ்யா இதுவரை கொரியத் தீபகற்பம் பற்றி நடக்கும் பேச்சுவார்த்தைகளில் ஒதுங்கியே இருந்து வருகிறது. தமக்குள் பரஸ்பர நல்லுறவுகள் கொண்ட நாடுகளாகவே வட கொரியாவும், ரஷ்யாவும் விளங்கி வருகின்றன.
கிம் யொங் உன் இதுவரை இரண்டு தடவைகள் சீன அதிபரையும், தென் கொரிய ஜனாதிபதியையும் சந்தித்திருக்கிறார். வட கொரிய உயரதிகாரிகள் குழுவொன்று அமெரிக்காவில் தற்சமயம் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது.