யாழில் கூடும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள்
வடமாகாண திரைத்துறைக் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகத்தினர் பலரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இது தந்தை செல்வா கலையரங்கம் மற்றும் யாழ் மத்திய கல்லூரி ஆகிய மண்டபங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த நேரமான சரியாக 4 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வில் திரைத்துறை சார் ஆளுமைகள், மூத்த கலைஞர்கள் பலரும் கலந்து தங்கள் அனுபவ பகிர்வுகளை பகிர்ந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் திரைத்துறைக் கலைஞர்கள் சங்கம் தங்களை தன்னார்வ செயற்குழு என அடையாளப்படுத்தி இந்த ஒன்றுகூடலுக்கான அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.