வவுனியாவில் நிகழ்வு – பண்டார வன்னியனின் நினைவு தினம்

வன்னி இராச்சியத்தின் நிறைவு மன்னன் பண்டார வன்னியனின் நினைவுதினம் 25/08/2020 இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பண்டாரவன்னியன் நினைவு அமைப்பும் வவுனியா நகரசபையும் இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தன. வவுனியா நகர சபைத்தலைவர் கௌதமன் நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு எதிராக போராடிய நிறைவு மன்னன் பண்டாரவன்னியனுக்கு அமைக்கப்பட்ட சிலை அமைந்த இடத்திலிருந்து நிகழ்வுகள் ஆரம்பித்தன.இந்த சிலை அமையப்பெறக் காரணகர்த்தாக்களில் ஒருவரான சட்டத்தரணி சிற்றம்பலம் அவர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடந்து மாவட்ட அரசாங்க அதிபர்,நகரசபை உறுப்பினர்கள்,அமைப்புகளை சார்ந்தர்வர்கள் எனப் பலரும் மலர்மாலை அணிவித்து தங்கள் மரியாதையை வழங்கினர்.

தொடர்ந்து நினைவுப்பேருரையை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இதே வேளை யாழ்ப்பாணத்திலும் மணிக்கூட்டு கோபுரத்தடியில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் உருவச்சிலைக்கு அருகில் குறித்த நினைவுதினம் அனுஷ்டிக்கபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *