நாடகக் கீர்த்தி’ விருது பெற்றார் மரிய சேவியர் அடிகளார்
திருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி 2020 ஆம் ஆண்டான நேற்று அரச உயர் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டுள்ளது
திருமறைக் கலாமன்றம் என்ற பெருங் கலை நிறுவனத்தை நிறுவி,யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஐம்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத கலைப்பயணத்தில் ஈடுபட்ட பெருமை அடிகளாருக்கு உண்டு. தன் கலைப்பணிக்காலத்தில் பல்வேறுபட்ட சாதனைகளைப் படைத்து பல நாடகக்கலைஞர்களை தன்பாசறையில் வளர்த்த பெருமைக்குரியவருமாவார்.
இன்றைய நாட்களில் மூப்பினால் தளர்வுற்று ,ஓய்வு நிலையில் இருக்கின்ற அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார் நேற்று மாலை கொழும்பு, தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற அரச நாடக விழாவின் விருது வழங்கும் நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில் திரு.மரிய சேவியார் அடிகளார் சார்பில் திருமறைக் கலாமன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருள்பணி.அ.அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் பெற்றுக்கொண்டார்
இந்த உயர் விருது வழங்கும் நிகழ்வுகள் புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவல்கள் திணைக்களம்,இலங்கைக் கலைக்கழகம்,அரச நாடக ஆலோசனைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“நாடகக்கீர்த்தி” எனும் இந்த உயர் விருதினை பெற்றுக்கொண்ட மற்றவர்கள் சிங்கள மொழிக் கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடகக்கீர்த்தி அருட்கலாநிதி மரிய செவியர் அடிகளார் அவர்களை வெற்றிநடையும் அன்போடு வாழ்த்துகிறது.