கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை.
சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது.
சுமார் பத்து மில்லியன் பேர் வாழும் முக்கியமான இந்த நகரில் காணப்பட்டிருக்கும் இந்தத் தொற்றுச் கடந்த ஐந்து மாதங்களில் சீனாவில் காணப்பட்டிருக்கும் பெரும் இலக்கமாகும். எனவே நகரிலிருந்து எவரும் பயணம் செய்தத் தடைகள் பிறப்பிக்கப்பட்டு எல்லோரும் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். நகரின் பெரிய மருத்துமனை அங்குள்ள மற்ற நோயாளிகளை வெளியேற்றிக் கொரோனா நோயாளிகளைக் கையாள்வதற்காகத் தயார் செய்யப்படுகிறது.
சீனாவின் தலைநகரான பீஜிங் அங்கிருந்து அதிக தூரத்திலில்லை. அங்கும் கொவிட் 19 தொற்றுக்கள் சமீப நாட்களில் கவனிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பெப்ரவரி மாதத்தில் வரவிருக்கும் சீனப் புதுவருடத்துக்கான பிரயாணத்திட்டங்களைத் தவிர்க்கும்படி நாடெங்கும் சீனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்