இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கும் பறவைக் காய்ச்சல்!
இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவைகளைத் தவிர டெல்லி, சத்திஸ்கார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் பரவியிருப்பதாகவும் அவைகளை உறுதிப்படுத்த ஆராய்வுகள் நடந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது.
மஹாராஷ்டிராவில் ஒரு கோழிப்பண்ணையில் 900 பறவைகள் இறந்து கிடந்ததாகவும், 1,200 பறவைகள் இறந்து ஆங்காங்கே டெல்லியில் கிடந்ததாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் மிகப்பெரிய பறவைச்சந்தையான காஸிப்பூர் சந்தையை உடனடியாக மூடிவிட உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் வெளிநாட்டுப் பறவைகள் இறக்குமதியும் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
டெல்லிப் பிராந்தியத்தில் ஆங்காங்கே சுமார் 25 காகங்களும், சஞ்சய் குளத்தருகே 10 வாத்துக்களும் இறந்து கிடந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. நீர் நிலைகளைக் கொண்ட மக்கள் திரளும் பூங்காக்களான ஹௌஸ் காஸ், சஞ்சய் குளம் பகுதி உட்படச் சகல பூங்காக்களையும் டெல்லி அரசு மூடிவிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்