கிறீஸ்து திருமுழுக்குச் செய்யப்பட்ட இடம் கண்ணிவெடிகளற்றது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இஸ்ராயேலின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஜோர்டானின் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜோர்டான் நதியோரத்திலிருக்கிறது கிறிஸ்துவுக்கு யோவான் திருமுழுக்குக் கொடுத்த இடம். உலகெங்குமிருந்து கிறீஸ்தவர்களை ஈர்க்கும் அந்தத் தலம் அவ்விரு நாட்டு எல்லையில் இருக்கிறது. போர்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அப்பிராந்தியமெங்கும் நிறைந்திருந்தது.
கஸர் அல் யாஹூத் என்ற இடத்திலிருக்கும் அந்த தலத்திற்கு வருபவர்கள் அங்கிருக்கும் “கண்ணிவெடிகள் கவனம்” என்ற எச்சரிக்கைப் பலகைகளைக் காணலாம். எனவே சுதந்திரமாக அங்கே நடமாட முடியாது. 2018 இல் ஒரு ஸ்கொட்லாந்து நிறுவனத்துடன் சேர்ந்து இஸ்ராயேல் அதைச்சுற்றியிருந்த பிரதேசங்களில் இருந்த கண்ணிவெடிகளையெல்லாம் அகற்ற ஆரம்பித்து அவ்வேலை நிறைவடைந்துவிட்டதால் அந்த எச்சரிக்கைப் பலகைகள் அகற்றப்பட்டுவிட்டன.
அதன் பின்பு முதல் தடவையாக 50 வருடங்களுக்குப் பின்னர் “மூவிராசாக்கள் திருவிழா” அங்கே கொண்டாடப்பட்டது. இஸ்ராயேலின் கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் ஆயர் பிரான்ஸிஸ்கோ பட்டன் அந்த நிகழ்ச்சியைக் கொரோனாக் கட்டுப்பாடுகளான 50 பேருடன் நடத்தினார்.
சாள்ஸ் ஜெ. போமன்