கங்கைக்கரையில் ஒரு மில்லியன் பேர் ஒன்று சேரப்போகும் கும்பமேளா!
வருடாவருடம் கங்கைக்கரையில் கும்பமேளா திருவிழாவுக்காகச் சேரும் இந்து விசுவாசிகள் இந்த வருடமும் அதில் பின் நிற்கவில்லை. 800,000 முதல் ஒரு மில்லியன் பேர்வரை 14.01 வியாழனன்று அங்கே ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாத்ரீகர்களிடையே கொரோனாத்தொற்றுக்களைத் தவிர்க்கச் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.
மரணத்தை வெல்லும் பானத்துக்காகத் தேவர்களும், அரக்கர்களும் போர் புரிந்தபோது நாலு துளிகள் அதிலிருந்து வெவ்வேறு இடங்களில் வீழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அதிலொரு துளி இவ்விடத்திலும் விழுந்தது என்கிறது புராணம். 2019 இல் அலாஹாபாத்தில் கும்பமேளா கூடிய 48 நாட்களில் 55 மில்லியன் யாத்ரீகர்கள் அங்கே வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
2021 இல் ஹரித்துவாரில் அவர்கள் வரவிருக்கும் ஏழு வாரங்கள் கூடும்போதும் பல மில்லியன் பேர் வருவார்கள் என்றே கருதப்படுகிறது. இதே வாரம் கோல்கத்தாவில் கங்காசாகரில் 15,000 பேர்கள் கூடும் திருவிழா, மதுரையில் ஜல்லிக்கட்டு ஆகியவையும் நடைபெற இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்