கொவிட் 19 தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களும் மற்றவர்களுக்குத் தொற்றைக் காவிச் செல்லலாம்.
கொரோனாக் கிருமிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்குத் தப்பவே கொவிட் 19 தடுப்பு மருந்துகள் உதவுகின்றன. தடுப்பு மருந்தைப் பெற்றவரில் கிருமி தொற்றினாலும் அது அவரை லேசாகப் பாதிக்கும் அல்லது முழுசாகப் பாதிக்காது, ஆனால், தொற்றை அவர் காவி மற்றவருக்குப் பரப்பக்கூடும்.
சமீப காலத்தில் உலகின் சில நாடுகளில் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் விநியோகிக்கத் தொடங்கியதும் இனிமேல் தொற்றுக்கள் தொடராது ஆகக்குறைந்தது தடுப்பு மருந்து பெற்றவர்களாவது அதை மற்றவர்களுக்குப் பரப்பமாட்டார்கள் என்ற மனக்கணக்குப் போட்டுக்கொண்டிந்தோம். தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவர்கள் கூட கொவிட் 19 முன்னர் போல வாழலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்கள் தடுப்பு மருந்து விற்பன்னர்கள். வந்திருக்கும் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்தும் சமூக விலகல், சுத்தம் போன்றவற்றை கொரோனாக் காலம் போலவே பின்பற்றவேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.