இயற்கை
இறைவனின் படைப்பில் உருவான அதிசயமே இயற்கை !
நீல நிறப் போர்வை கொண்ட வானமே
உன்னை மடிக்க முடியாமல் மறைத்துக் கொள்கின்றனர் மேகங்கள்!
வானையே தொட முயற்சிக்கும் மலைப்பிரதேசங்கள்!
பகலில் சுட்டெரிக்கும் சூரியனும் இரவில் குளிக்கும் சந்திரனும் உன் குழந்தைகளோ?
விண்ணுக்கும் மண்ணுக்குமான எண்ணிலடங்கா கம்பிகளாய் மழைத்துளிகள்!
காற்றே, நீ சொன்ன நகைச்சுவைக்காக குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன மரங்கள்!
ஆக்ரோஷ அலைகளை கொண்ட கடலே,
உன்னழகை விமர்சிக்க அலை மோதுகின்றன வார்த்தைகள் !!
எழுதுவது
சீ.அல்ஸொய்மா
1- முதுநிலை கணிதம்
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி